ஜிஎஸ்டி வருகை... “லாஜிஸ்டிக்ஸ் துறை நன்கு வளர்ச்சி அடையும்!”

ஏ.ஆர்.குமார்

விரைவில் நடைமுறைக்கு வரப் போகிறது ஜிஎஸ்டி எனச் சுருக்கமாக அழைக்கப்படும் பொருள்கள் மற்றும் சேவை வரி. இந்தப் புதிய வரி விதிப்புமுறை நடைமுறைக்கு வந்தால், லாஜிஸ்டிக்ஸ்  துறையில் வியக்கத்தக்க மாற்றங்கள் ஏற்படும். அதனால் அந்தத் துறை பெரிய அளவில் வளரும் என்கிறார் டிவிஎஸ் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஆர்.தினேஷ். நாணயம் விகடனுக்கு அவர் அளித்த பேட்டி இனி...

  ஜிஎஸ்டி வரி விதிப்பானது லாஜிஸ்டிக்ஸ் துறையில் என்ன மாற்றங்களைக் கொண்டுவரும்?

‘‘இந்த வரி விதிப்பானது லாஜிஸ்டிக்ஸ் துறையில் பெரிய மாற்றங்களைக் கொண்டுவரும். வெறுமனே பொருள்களைக் கொண்டுசெல்வது  அல்லது ஏதோ ஓரிடத்தில் பொருள்களை வைத்திருந்து (Warehousing) வேறு இடத்துக்குக் கொண்டு செல்வது என்கிற இரண்டு செயல்பாடுகளை மட்டுமே லாஜிஸ்டிக்ஸ் என நாம் பார்த்து வந்திருக்கிறோம்.

ஆனால், உலக அளவில் அப்படியில்லை. ரீடெய்ல் தொழிலாக இருந்தாலும் அல்லது பெரிய அளவில் செய்யப்படும் பிசினஸாக இருந்தாலும், லாஜிஸ்டிக்ஸ் துறையின் செயல்பாடுகள் இல்லாமல் எந்தத் தொழிலும் நடக்காது. ஜிஎஸ்டி வரி நடைமுறைக்கு வந்தபிறகு, நாமும் லாஜிஸ்டிக்ஸ்கை வெறும் போக்குவரத்து என்று பார்க்க வேண்டிய அவசியமிருக்காது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick