அஸெட் அலோகேஷன் ஃபண்டுகளில் முதலீடு செய்வது லாபமா? | Asset Allocation Investment is Profit or Not - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (21/05/2017)

அஸெட் அலோகேஷன் ஃபண்டுகளில் முதலீடு செய்வது லாபமா?

சொக்கலிங்கம் பழனியப்பன், இயக்குநர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்.

ரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட வகையான சொத்துகளில் முதலீடு செய்யும் ஃபண்டுகளைக் கலப்பின ஃபண்டுகள் அல்லது ஹைபிரிட்  ஃபண்டுகள் என்று அழைக்கிறோம். கலப்பின ஃபண்டுகளில் ஓர் உள்வகை, அஸெட் அலோகேஷன் ஃபண்டுகள் ஆகும். இந்த வகை ஃபண்டுகளானது பங்குகள், பாண்டுகள், தங்கம், குறைந்த விலைக்கு ஓரிடத்தில் வாங்கி, அதிக விலைக்கு வேறிடத்தில் விற்கும் ஆர்பிட்ரேஜ், ரியல் எஸ்டேட் என  பல வகைச் சொத்துகளில் முதலீடு செய்கின்றன. அதிகமான அஸெட் அலோகேஷன் ஃபண்டுகள் இரு வகைச் சொத்துகளில், அதாவது பங்குகள் மற்றும் பாண்டுகளில் தங்களது முதலீட்டை வைத்துக்கொண்டு, காலத்துக்கேற்றாற்போல் போர்ட்ஃபோலியோவை மாற்றி அமைத்துக் கொள்கின்றன.

   வித்தியாசம் என்ன?

பேலன்ஸ்டு ஃபண்டுகள், எம்.ஐ.பி, ஈக்விட்டி சேவிங்ஸ் ஃபண்டுகள் போன்ற வற்றுக்்கும், அஸெட் அலோகேஷன் ஃபண்டுகளுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?

முதலில் குறிப்பிட்ட மூன்று வகை ஃபண்டுகளும் நிரந்தரமான அஸெட் அலோகேஷனை வைத்துக் கொள்கின்றன. ஆனால் அஸெட் அலோகேஷன் ஃபண்டுகள் சந்தையின் நிலைமையைப் பொறுத்து, தங்களது அஸெட் அலோகேஷனை டைனமிக்காக மாற்றி அமைத்துக் கொள்கின்றன. உதாரணமாக,  பேலன்ஸ்டு ஃபண்டுகள், எப்போதும் 65 சதவிகிதத்துக்குக் குறையாமல் பங்கு சார்ந்த முதலீட்டைத் தனது போர்ட்ஃபோலியோவில் வைத்துக்கொள்ளும்; எஞ்சியதைக் கடன் சார்ந்த முதலீடுகளில் வைத்துக்கொள்ளும்.

பங்கு மற்றும் பாண்டுகளில் மட்டும் முதலீடு செய்யும் அஸெட் அலோகேஷன் ஃபண்டுகள், இந்த இரு வகைச் சொத்துகளின் சதவிகிதத்தைச் சந்தையின் மதிப்பீட்டைப் (Valuation) பொறுத்து டைனமிக்காக மாற்றிக்கொள்ளும். சில சமயங்களில் பங்கு சார்ந்த முதலீடு 100 சதவிகிதம்கூட இருக்கலாம்; இன்னும் சில சமயங்களில் அதுவே ஜீரோவாகக்கூட இருக்கலாம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க