கேட்ஜெட்!

GADGETSஞா.சுதாகர்

எல்ஜி G6 (LG G6)

இந்த ஆண்டின் தொடக்கத்தில் மொபைல் வேர்ல்டு மாநாட்டில் எல்.ஜி நிறுவனம் அறிமுகம் செய்த மொபைல் போன், இப்போது  விற்பனைக்கு வந்துள்ளது. 5.7 இன்ச் QHD டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 821 பிராசஸர், 64 ஜி.பி மெமரி, 4 ஜி.பி ரேம், 3,300 mAh பேட்டரி, ஆண்ட்ராய்டு நௌகட் ஓ.எஸ், IP68 வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் என டெக் உலகின் டிரெண்ட்டுக்கேற்ப இருக்கிறது எல்.ஜி. G6.

டிஸ்ப்ளே டிசைனில் நல்ல மதிப்பெண் வாங்குகிறது எல்.ஜி. 5.7 இன்ச் டிஸ்ப்ளேவில் விளிம்புப் பகுதி குறைவாகவும், டிஸ்ப்ளே அதிகமாகவும் இருப்பதால், பெரிய போன் என்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. டிஸ்ப்ளே பெர்ஃபாமன்ஸிலும் எந்தக் குறையும் வைக்கவில்லை. இதற்காக ஹோம் பட்டன் மற்றும் ஃபிங்கர்பிரின்ட் சென்சார் பின்பக்கத்துக்கு நகர்ந்துள்ளன. மற்றபடி போனின் வடிவமைப்பில் பெரிதாக எந்த மாற்றங்களும் இல்லை.

வைட் ஆங்கிள் லென்ஸுடன் கூடிய 13 எம்.பி டூயல் ரியர் கேமராக்களைக் கொண்டுள்ளது. முன்பக்கம் 5 எம்.பி கேமரா இருக்கிறது. கேமராவின் செயல்பாடும் திருப்தியாக இருக்கிறது.

ஆனால், ரூ.55,000 என்கிற விலைக்கேற்ற சிறப்பம்சங்கள் இல்லை. பிளாட்டினம் மற்றும் பிளாக் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது இது.

பிளஸ்

* டிஸ்ப்ளே பெர்ஃபாமன்ஸ் சூப்பர்

* டூயல் ரியர் கேமராவின் திறன்

மைனஸ்

* சிறப்பம்சங்களைப் பொறுத்து பார்த்தால், விலை கொஞ்சம் அதிகம்

* சாதாரணமான டிசைன்

விலை


* ரூ.55,000 முதல் கிடைக்கிறது

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்