22 வருடங்கள்... 4 பேர்... 7 ஆர்.டி - இன்க்ரிமென்ட்... அப்படியே இன்வெஸ்ட்மென்ட்!

கு.ஆனந்தராஜ்

டந்த 22 ஆண்டுகளாகத் தனக்கும், தன் குடும்பத்தினருக்கும் வங்கி ஆர்.டி சேமிப்பின் மூலம் தன் குடும்பத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்து வந்திருக்கிறார் சென்னையைச் சேர்ந்த பாலகார்த்திகா. தனியார் வங்கியொன்றில் முதன்மை மேலாளராகப் பணியாற்றும் அவர், தன்னுடைய ஆர்.டி சேமிப்பு அனுபவத்தை எடுத்துச் சொன்னார். 

“1995-ம் வருஷம், என்னோட 21 வயசுல தனியார் வங்கியில் சாதாரண கிளர்க்கா பணியைத் தொடங்கினேன். அப்பவே சின்னத் தொகையையாவது சேமிக்கணும்னு நினைச்சேன். குடும்பக் கஷ்டத்துல அப்ப என்னால சேமிக்க முடியல. அப்ப என் அண்ணனுக்கு விபத்து நடந்து வீட்லயே இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுச்சு. என் அண்ணனோட பொழுதுபோக்குக்காக ஏதாச்சும் கிஃப்ட் வாங்கித் தரணும்னு நினைச்சு, நான் வேலை செஞ்ச வங்கியிலயே ரெக்கரிங் டெபாசிட்ல மாசம் 25 ரூபாயை சேமிக்க ஆரம்பிச்சேன். அப்போ இருந்த   10 - 12 சதவிகித வட்டி விகிதப்படி, ஓராண்டுச் சேமிப்பு முடிவுல எனக்குத் தோராயமா 350 ரூபாய் வரைக்கும் கிடைச்சுது. அந்தத் தொகையோட, கொஞ்சம் பணம் போட்டு என் அண்ணனுக்கு டேப் ரெக்கார்டர் வாங்கிக் கொடுத்தேன். அதைப் பார்த்துட்டு என் அண்ணன் அடைஞ்ச சந்தோஷத்தை நினைச்சா இப்பக்கூட நெகிழ்ச்சியா இருக்கு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்