அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி? | Income tax calculation for government employees - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (21/05/2017)

அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?

ப.முகைதீன் சேக்தாவூது

‘வருமான வரிதானே... பிப்ரவரி மாதம் வரட்டும்; பார்த்துக்கொள்ளலாம்’ என்று எண்ணிக் கொண்டிருந்த காலம் மலையேறிவிட்டது. காரணம், அப்போது வருமானம் குறைவு. எனவே, வரி செலுத்தவேண்டிய கட்டாயம் பலருக்கும் இல்லை. ஆனால் இப்போது கால ஓட்டமும், ஊதிய நிலைகளில் ஏற்பட்ட மாற்றமும் சேர்ந்து, பணியாளர்களுக்கான சம்பளத்தைக் குறிப்பிடத்தக்க அளவுக்கு உயர்த்தியுள்ளதால், வரி கட்ட வேண்டிய நிலைக்கு பலரும் உயர்ந்துள்ளனர்.

அரசு ஊழியர்களில் பலர் இப்போது வருமான வரி கட்டுபவர்களாக மாறியிருக்கிறார்கள்.  தமிழக அரசு ஊழியர்களுக்குப் பரிசீலனையில் உள்ள ஊதியச் சீரமைப்புக்குழு அறிக்கை நடைமுறைக்கு வரும்போது, இன்னும் பலர் வரி வட்டத்துக்குள் வந்துவிடக்கூடும். முன்பு ஆண்டுக்கொருமுறை கட்டிய வருமான வரியை தற்போது மாதம்தோறும் கொஞ்சம் கொஞ்சமாக ஒதுக்கீடு செய்ய வேண்டிய நிலைக்கு வந்துவிட்டோம்.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க