வான்னா க்ரை... பாதுகாக்கும் வழிகள்!

கருப்பு

லகம் முழுவதும் பரபரப்பாகப் பேசப்படும் விஷயமாக ‘வான்னா க்ரை’ (Wanna Cry) ரான்சம்வேர் மாறியுள்ளது. இந்த வைரஸ் தாக்குதலினால் உலகம் முழுக்க இரண்டு லட்சத்துக்கும் மேலான கணினிகள் பாதிப்படைந்தன. இந்தப் பாதிப்பில் இருந்து நம்முடைய கம்ப்யூட்டரைப் பாதுகாக்கும் வழிகள் இதோ...

* இ-மெயில் மூலமாகவே ரான்சம்வேர் அதிகம் பரவுகிறது. எனவே, தெரியாத முகவரியிலிருந்து வரும் இ-மெயிலைத் திறக்காமல் இருப்பது நல்லது.

* மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்டங்கள் வழியாகத்தான், இந்த வைரஸ் அதிகளவில் பரவி வருகிறது. எனவே, Windows Server 2003, Windows XP மற்றும் Windows 8 போன்றவற்றை நீங்கள் பயன்படுத்தினால், மைக்ரோ சாஃப்ட் சமீபத்தில் வெளியிட்டுள்ள செக்யூரிட்டி அப்டேட்டை உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்யுங்கள்.

* தரமான ஆன்ட்டி-வைரஸ் மென்பொருளைக் கணினியில் நிறுவுவதோடு, அதை அடிக்கடி அப்டேட் செய்வதும் அவசியம். இதேபோல, கணினியின் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தையும் அப்டேட் செய்வது நல்லது.

* பென் ட்ரைவ், ஹார்ட் டிஸ்க் போன்றவற்றைக் கணினியுடன் இணைக்கும்போது அதை ஸ்கேன் செய்த பின்னரே பயன்படுத்த வேண்டும்.

* உங்கள் கணினி ரான்சம்வேர் தாக்குதலுக்கு உள்ளானால், உடனடியாக இணைய இணைப்பைத் துண்டிப்பது நல்லது.

* முன்னணி ஆன்ட்டி வைரஸ் மென்பொருள் நிறுவனமான காஸ்பர்ஸ்கை, ஐரோப்பிய காவல் துறையின் சைபர்க்ரைம் தடுப்புப் பிரிவும், இன்டெல் நிறுவனமும் இணைந்து நோமோர் ரேன்சம் (https://www.nomoreransom.org/) என்ற இணையதளம் ஒன்றை நிறுவியுள்ளது.  ரேன்சம் வேர்களினால் பாதிக்கப்பட்ட கணினியில் இருந்து, தகவல்களை மீண்டும் அன்-லாக் செய்யும் அப்ளிகேஷன்கள் இந்த இணையதளத்தில் கிடைக்கின்றன. ரான்சம் வேர்களில் இருந்து தகவல்களைப் பாதுகாக்கும் வழிகளும் இதில் கிடைக்கின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்