பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

டாக்டர் சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர், குரோத் அவென்யூஸ் (GROWTH AVENUES), மும்பை. SEBI Registration (Research Analyst) INH000001964

இண்டெக்ஸ்

கடந்த வாரத்தில் காளையின் போக்கில் தொடர்ந்த இந்திய பங்குச் சந்தை, வார இறுதியில் லாப நோக்கிலான விற்பனையால் இறக்கத்தைச் சந்தித்தது. அமெரிக்காவிலிருந்து வந்த செய்தியும் அதனால் ஏற்பட்ட சர்வதேச சந்தைகளின் இறக்கமும் இந்தியச் சந்தைகளின் இறக்கத்துக்குக் காரணமாயின. ஆனாலும் இந்தியச் சந்தைகள்,  இறக்கம் காண நேரிடலாம் என முன்கூட்டியே உணர்ந்து, அதனைச் சந்திக்க தயார் நிலையில் இருந்தன. அது நடக்கவும் செய்தது. தற்போது முதலீட்டாளர்கள் எழுப்பும் கேள்வி என்னவெனில், சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த இறக்கம் மேலும் தொடருமா அல்லது இத்துடன் முடிந்துவிடுமா என்பதே.

சார்ட் பேட்டர்ன்களைப் பார்க்கும் போது, இரண்டு நாள்கள் ஏற்பட்ட இறக்கத்தில், இறக்கம் குறைவாகவே இருந்தது. எனவே, இந்த இறக்கமானது குறுகிய கால ஊசலாட்டம்தான். இதற்கு மேலும் இறக்கம் வராதபட்சத்தில் இது ஏற்ற இறக்கமில்லாத வர்த்தக நிலையை உருவாக்கலாம். ஆனால், சந்தையின் மீது முதலீட்டாளர்கள் வைத்துள்ள பாசிட்டிவான நம்பிக்கையை ஒட்டு மொத்தமாகச்  சீர்குலைக்கும் வகையிலான செய்திகள் வரும்வரை சந்தை பெரிய அளவில் இறங்க வாய்ப்பில்லை.  சந்தை தற்போதுள்ள நிலையில், பெரிய ஏற்றத்துக்கான வாய்ப்பு, தொடர்ச்சியான முதலீடு, முன்னேற்றமடைந்த முடிவுகள், மற்றும் மேக்ரோ அளவிலான காரணிகள் ஆகியவற்றில் பெரிய மாற்றம் ஏதுமில்லை. எனவே, சந்தை சிறு சிறு இறக்கங்களை மட்டுமே சந்திக்க நேரிடும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்