எட்டு நிறுவனங்களின் இரண்டாம் காலாண்டு முடிவுகள்! | Second Quarterly Financial Results of eight companies - Nanayam Vikatan | நாணயம் விகடன்

எட்டு நிறுவனங்களின் இரண்டாம் காலாண்டு முடிவுகள்!

   டாடா ஸ்டீல்

டாடா ஸ்டீல் நிறுவனம், தனது முதலீட்டாளர் களுக்கு இன்ப அதிர்ச்சியைத் தந்திருக்கிறது. கடந்த ஏப்ரல் - ஜூன் காலாண்டில் 49 கோடி ரூபாய் நஷ்டம் தந்த இந்த நிறுவனம், கடந்த ஜூலை - செப்டம்பர் காலாண்டில் 1,018 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டியிருக்கிறது. கடந்த காலாண்டில் இந்த நிறுவனத்தின் விற்பனை 15% அதிகரித்து, 6.45 மில்லியன் டன்னாக இருந்தது. இதில் 48 சதவிகித விற்பனை இந்தியாவிலேயே நடந்திருக்கிறது. இந்த நிறுவனத்தின் கடன், கடந்த காலாண்டில் ரூ.2,447 கோடி அதிகரித்து ரூ.90,259 கோடியாக உயர்ந்திருக்கிறது. உற்பத்தி அதிகரித்ததாலும், நிறுவனத்துக்கு வரவேண்டிய பணம் சரியாக வந்ததாலும் இந்த நிறுவனத்தின் லாபம் அதிகரித்திருக்கிறது.

   ஹெச்.டி.எஃப்.சி வங்கி

ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் லாபம் கடந்த காலாண்டில் 15% அதிகரித்துள்ளது. இந்த ஆண்டின் முதல்  காலாண்டில் ரூ.1,827 கோடியைச் சம்பாதித்த இந்த வங்கி,  இரண்டாம் காலாண்டில் ரூ.2,101 கோடியை லாபமாக ஈட்டியிருக்கிறது. இந்த நிறுவனம் அளிக்கும் தனிநபர் கடன் 23% அதிகரித்திருப்பது, லாபம் அதிகரிக்க முக்கியமான காரணமாகும். கடந்த செப்டம்பர் மாத இறுதி வரை இந்த நிறுவனம் அளித்திருக்கும் மொத்தக் கடன் ரூ.3.68 லட்சம் கோடி ஆகும்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick