சுலபத்தில் சொந்த வீடு... - கனவை நனவாக்கும் அரசு ஊழியர் வீட்டுக் கடன்! | Home loan for government employee - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (03/09/2017)

சுலபத்தில் சொந்த வீடு... - கனவை நனவாக்கும் அரசு ஊழியர் வீட்டுக் கடன்!

ப.முகைதீன் சேக்தாவூது

முப்பதாண்டுகளுக்கு முன்பு, வெகுதூரக் கனவாக இருந்த ‘சொந்த வீடு’ தற்போது அருகில் காத்திருக்கும் அழகிய நிஜமாகிவிட்டது. காரணம், வீட்டுக் கடன் என்ற ஒன்று வங்கிகளில் இருப்பதையே அறியாமல் இருந்த காலம் போய், கடன் தரும் வங்கிகளே தங்களது வீட்டுக் கடன் நடைமுறையை விளம்பரம் செய்து வருகின்றன. பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகள், ஐ.சி.ஐ.சி.ஐ, ஆக்ஸிஸ் போன்ற தனியார் வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் என எங்கெங்கு காணினும் வீட்டுக் கடன் விளம்பரம். அதிலும், மாத ஊதியம் பெறுவோர் மற்றும் நிரந்தர வருமானமுடையோர் வீட்டுக் கடன் பெறுவது இன்றைக்கு மிக எளிதான விஷயமாகிவிட்டது.ஏனெனில், இ.எம்.ஐ எனப்படும் மாத சம தவணை முறைக்கு மாத ஊதியம் அனுகூலமானது என்பதுதான்.    

நீங்க எப்படி பீல் பண்றீங்க