கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில்

தி.ரா.அருள்ராஜன், தலைவர், பங்குச் சந்தை, கமாடிட்டி சந்தை பயிற்சி மையம், www.ectra.in

தங்கம் மினி

பங்குச் சந்தை தற்போது பக்கவாட்டில் நகர்ந்து கொண்டிருக்கிறது.அதே நேரம் தங்கமானது, ஏற்றத்தின் முயற்சியில் தோல்வியடைந்து இறங்க ஆரம்பித்துள்ளது.

கடந்த இதழில் சொன்னது... “தங்கம் மிக வலிமையாக ஏறி இருக்கும் நிலையில், தற்போது 30850 என்ற எல்லை உடனடித் தடைநிலையாக உள்ளது.  இந்தத் தடைநிலை உடைக்கப்பட்டால், அடுத்து இதைவிட இன்னும் வலிமையாக ஏறி 31300 என்ற எல்லையை நோக்கிப் பயணிக்கலாம்.  கீழே உடனடி ஆதரவு நிலை 30400 ஆகும்.’’

தங்கம், கடந்த வாரங்களில் பக்கவாட்டு நகர்விலேயே இருந்தது. அதன்பின் நாம் கொடுத்திருந்த கீழ் எல்லையிலிருந்து ஏறி, மேல் எல்லையைத் தொட்டது. அத்துடன் மட்டுமல்லாமல், மேல் எல்லையான 30850-ஐ உடைத்து ஏறியது.  இந்த ஏற்றம், முந்தைய வாரம் வெள்ளியன்று அதிகபட்சமாக 30947 என்ற எல்லையைத் தொடவைத்தது.  

ஆனால், அடுத்து திங்களன்று முந்தைய ஏற்றத்தைத் தொடர முடியாமல், சற்றே இறங்கி ஒரு ஸ்பின்னிங் டாப் உருவமைப்பைத் தோற்றுவித்தது. இந்த அமைப்பானது, ஏற்றம் தொடர முடியாமல் சிரமப்படுவதைக் காட்டுகிறது.  அடுத்து செவ்வாயன்று நிகழ்ந்த இறக்கம்,  அதை உறுதி செய்தது. இந்த இறக்கம் புதனன்றும் தொடர்ந்தது. கீழே குறைந்தபட்சப் புள்ளியாக 30490 என்ற புள்ளியைத் தொட்டது. இந்த இறக்கம் தொடருமா என்பதே தற்போது கேள்விக்குறியாக உள்ளது.

இனி என்ன நடக்கலாம்? தங்கம் ஓர் இறக்கத்திற்கு மாறிய நிலையில், தற்போதைய உடனடி ஆதரவான 30400-ஐ தக்கவைக்குமா என்று பார்க்கவேண்டும். இந்த ஆதரவு தக்கவைக்கப்பட்டால், காளைகள் மீண்டும் மேலே திருப்புவார்கள். அது 30800-ஐ நோக்கி நகரும். இல்லையெனில், மீண்டும் கீழே முக்கிய ஆதரவான 30100-ஐ நோக்கி நகரலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick