நிஃப்டியின் போக்கு: இறக்கம் மீண்டும் தொடரலாம்!

டிரேடர்ஸ் பக்கங்கள்டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

மூன்றே டிரேடிங் தினங்களைக் கொண்ட வாரத்தில், இரண்டு நாள்கள் ஏற்றத்திலும் ஒரு நாள் இறக்கத்திலும் முடிவடைந்த நிஃப்டி, வாரத்தின் இறுதியில் வாராந்திரரீதியாக 115 புள்ளிகள் ஏற்றத்துடன் முடிவடைந்திருந்தது. 

10150 லெவல்களுக்குக் கீழேயே நிஃப்டி இருந்தால், மீண்டும் இறக்கம் தொடர வாய்ப்புள்ளதைப்போன்ற டெக்னிக்கல் சூழலே சந்தையில் நிலவுகிறது. இறக்கம் தொடர்ந்தால், 9850-9800 போன்ற லெவல்களிலேயே சிறிய சப்போர்ட்கள் கிடைக்க வாய்ப்புள்ளன. நிஃப்டியானது ஒருவேளை 10150 என்கிற லெவலைத் தாண்டி, வால்யூமுடன் இரண்டுக்கும் மேற்பட்ட தொடர் குளோஸிங்குகளைச் சந்தித்தால், 10270 என்ற லெவல் வரைச் சென்று திரும்புவதற்கான வாய்ப்பு சற்று இருக்கிறது. செய்திகளும் நிகழ்வு களும் மட்டுமே நிஃப்டியின் அடுத்த நகர்வை நிர்ணயிக்கும் என்பதால், செய்திகளின்மீது கவனம் வைத்தே டிரேடர்கள் வியாபாரம் செய்ய வேண்டியிருக்கும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick