பிட்காயின் பித்தலாட்டம் - ரியோ டி ஜெனிரோ / கோவா - த்ரில் தொடர் -5

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ரவி சுப்ரமணியன் (GOD IS A GAMER - Published by Penguin Random House India Pvt Ltd)ஓவியங்கள்: ராஜன்

சில மாதங்களுக்கு முன்பு, கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொள்வதற்காக தான்யா ரியோ டி ஜெனிரோவுக்குச் சென்றிருந்தாள். ஒருநாள் பின்னிரவு இரண்டு மணிக்கு பார்ட்டி முடிந்தபின் ஹோட்டலுக்குத் திரும்பிக்கொண்டிருக்க, அவளோடு வேலை பார்க்கும் சக ஊழியர் ஒருவரும், கேப் டிரைவரும் இருந்தனர்.

ஹோட்டல் லெ மெரிடியனுக்கு சில மீட்டர்கள் முன்னால் கோபகபானா (Copacabana) பீச்சில் இருளடைந்த சுரங்கப்பாதைக்குப்பின் கார் நிறுத்தப்பட்டது. சிக்னல் சிவப்புக்கு மாறியது. திடீரென்று இருளிலிருந்து ஒருவன் வந்து டிரைவரின் தலையில் துப்பாக்கியை வைத்தான். பிரேசிலில், பொது இடத்தில் இப்படி யாராவது கொள்ளையடிக்க வந்தால், உன்னிடம் என்ன இருக்கிறதோ, அதையெல்லாம் கொடுத்துவிடு என்பதுதான் முதல் விதியாகும்.  துரதிர்ஷ்டவசமாக, இதைப் பற்றி யாரும் தான்யாவின் அலுவலக நண்பரிடம் சொல்லாததால், அவர் தன் உரத்தக் குரலில் கத்தினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick