நிம்மதி தரும் நிதித் திட்டம் - 34 - செட்டில்மென்ட் தொகையை எப்படி முதலீடு செய்வது? | Financial relief plan - Nanayam Vikatan | நாணயம் விகடன்

நிம்மதி தரும் நிதித் திட்டம் - 34 - செட்டில்மென்ட் தொகையை எப்படி முதலீடு செய்வது?

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ஓவியம்: பாரதிராஜா

“என் பெயர் ஜாபர் பாட்ஷா. வயது 42. நான் மதுரையைச் சார்ந்தவன். பி.காம் படித்துள்ளேன். என் மனைவி வீட்டு நிர்வாகத்தைக் கவனித்துக்கொள்கிறார். எங்களுக்கு இரண்டு குழந்தைகள். மகளுக்கு 12 வயது. 7-ம் வகுப்பு படிக்கிறாள். மகனுக்கு ஐந்து வயது; முதல் வகுப்புப் படிக்கிறான்.

நான் கத்தாரில் உள்ள நிறுவனம் ஒன்றில் அக்கவுன்டன்டாகப் பணிபுரிந்து வருகிறேன். நான் பணிபுரியும் நிறுவனத்தை, 2018-ம் ஆண்டின் இறுதியில் மூடவுள்ளதாக அறிவித்துள்ளார்கள். எனவே, எனக்கு செட்டில்மென்ட் தொகையாக ரூ.30 லட்சம் கிடைக்கக்கூடும்.

நான் 2019 ஜனவரியில் இந்தியா வந்து செட்டில் ஆகும்போது மாதம் ரூ.15,000 வருமானம் வரும் வகையில், இந்தத் தொகையை நல்ல திட்டங்களில் முதலீடு செய்யலாமா அல்லது எதிர்கால இலக்குகளுக்கு முதலீடு செய்யலாமா எனக் குழப்பமாக உள்ளது. எது சரியாக இருக்கும்..?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick