ட்விட்டர் சர்வே: மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு அதிகரிக்க என்ன காரணம்? | Twitter survey - Nanayam Vikatan | நாணயம் விகடன்

ட்விட்டர் சர்வே: மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு அதிகரிக்க என்ன காரணம்?

ந்தியாவில் 2017-18-ம் நிதியாண்டின் முடிவில், மியூச்சுவல் ஃபண்டில் ரூ.23 லட்சம் கோடி முதலீடு ஆகியிருக்கிறது. கடந்த ஓராண்டு காலத்தில் ரூ.4.75 லட்சம் கோடி, மியூச்சுவல் ஃபண்டில் புதிதாக முதலீடாகியிருக்கிறது. இது 2016-17-ம் ஆண்டைவிட சுமார் 26% அதிகம். மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு இவ்வளவு உயர என்ன காரணம் என நாணயம் ட்விட்டரில் (https://twitter.com/NaanayamVikatan) ஒரு கேள்வி கேட்டோம். கிடைத்த புள்ளிவிவரங்கள் சுவாரஸ்யமானவை.

இந்த சர்வேயில் 49% பேர், வங்கி எஃப்.டி மீதான வட்டி குறைந்திருப்பதே மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு அதிகரிக்கக் காரணம் என்று சொல்லியிருக்கிறார்கள். இது மிகச் சரியான காரணம்தான். பத்து ஆண்டுகளுக்கு முன்பு 9 சதவிகிதமாக இருந்த வங்கி எஃப்.டி வட்டி, தற்போது 6.25% அளவுக்கு குறைந்திருக்கிறது. பணவீக்க விகிதம் அளவுக்குக்கூட வங்கி எஃப்.டி-யில் வருமானம் கிடைக்காததால், மியூச்சுவல் ஃபண்டில் மக்களின் கவனம் திரும்பியுள்ளது.

ரியல் எஸ்டேட்டில் கவர்ச்சிகர லாபம் இல்லை என உணர்ந்ததால்,  ஃபண்ட் முதலீடு அதிகரித்துள்ளது என 18% பேர் சொல்லியிருக்கிறார்கள். ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்தவர் கள், கடந்த சில ஆண்டுகளாக எந்த லாபத்தையும் அடையாததுடன், வாங்கிய மனைகளை விற்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick