ஃபண்ட் டேட்டா! - 18 - சந்தையின் நிலைக்கு ஏற்ப ரிஸ்க் எடுப்பவர்களுக்கு ஏற்ற ஃபண்ட்!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ரிலையன்ஸ் டாப் 200 ஃபண்ட்...சொக்கலிங்கம் பழனியப்பன் டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் (www.prakala.com)

மியூச்சுவல் ஃபண்டில் பல்லாயிரக்கணக்கான புதிய முதலீட்டாளர்கள் தினசரி முதலீடு செய்து வருகின்றனர்.  இதுபோல் புதிதாகப் பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்டு களில் முதலீடு செய்யவரும் முதலீட்டாளர்கள் ரிலையன்ஸ் டாப் 200 போன்ற ஒரு நல்ல லார்ஜ்கேப் ஃபண்ட் மூலம் முதலீட்டிற்குள் நுழைவது சிறந்ததாகும்.

ஏனென்றால், லார்ஜ்கேப் திட்டங்கள், நமது பங்குச் சந்தையை (நிஃப்டி 50 அல்லது சென்செக்ஸ் குறியீட்டை) ஒட்டியே நகரும். மேலும், இந்த ஃபண்டுகள் நல்ல உயர் தரமான, பெரிய நிறுவனப் பங்குகளிலேயே தங்களது முதலீட்டை வைத்துக்கொள்கின்றன. ஆகவே, ரிஸ்க் குறைவு. மேலும், இதுபோன்ற ஃபண்டுகள் போர்ட் ஃபோலியோவிற்கு ஒரு ஸ்திரத்தன்மையைக் கொடுக்கும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!