அங்காடித் தெரு - 17 - நேரு பஜார்... சிவகங்கையின் சிறப்பு!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

சிவகங்கையின் முக்கியமான வர்த்தக அங்காடிகளைக் கொண்டிருக்கும் நேரு பஜார் மற்றும் காந்தி வீதி அந்த வட்டாரத்தில் மிகப் பிரபலமானவை. சுதந்திரத்துக்காகப் போராடிய வேலுநாச்சியாரின் கோட்டையைச் சுற்றியே காந்தி வீதி மற்றும் நேரு பஜார் அமைந்துள்ளன.

சுதந்திரத்திற்குப் பிறகு வாணிபம் செய்துவந்த வாணியங்குடிதான்  இன்றைக்கு  நேரு பஜாராக மாறி நிற்கிறது. இந்த அங்காடித் தெருயில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மொத்த மற்றும் சில்லறை நுகர்பொருள் விற்பனை அங்காடிகள் உள்ளன. வீட்டு உபயோகப் பாத்திரங்கள், மெடிக்கல், ஜவுளி நிறுவனங்கள், மொபைல் ஷோரூம்கள் போன்றவை பரபரப்பாக இயங்கி வருகின்றன.  சுற்றுப்புறக் கிராம மக்கள் வீட்டிற்குத் தேவையான அனைத்துப் பொருள்களையும் இந்த இரண்டு வீதியில் வாங்கிச் செல்கிறார்கள்.

காந்தி வீதியில் பத்துக்கும் மேற்பட்ட ஜவுளிக் கடைகள் இயங்கி வருகின்றன. குழந்தைகளுக்கான சீருடைகள் முதல் திருமணத்துக்கான பட்டுப் புடவைகள், சினிமா பாணியிலான அலங்காரப் பொருள்கள், ஆண் களுக்கான பிராண்டட் சட்டைகள், பேன்ட்கள் என அனைத்து வகையான உடைகளும் இங்கு கிடைக்கின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!