இனி உன் காலம் - 16 - தப்பு தப்புதான்!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
டாக்டர் வி.விஜய் ஆனந்த் ஸ்ரீராம்

து மிகப்பெரிய தொழில் நிறுவனம். முன்தினம் தொழில்நுட்பக் கோளாரினால் உற்பத்தி ஒரு மணி நேரம் பாதிக்கப்பட்டிருந்தது. அதுகுறித்து பேசவே அடுத்த நாள் அலுவலகத்தில் மீட்டிங் ஏற்பாடு செய்யப்பட்டது.

மேலதிகாரி பிரச்னையின் காரணம் கேட்டார். ஒவ்வொருவரும் இன்னொருவரைக் கைகாட்டினார்கள். அனைத்தையும் பொறுமையாகக் கேட்டுவிட்டு, “நான் ஒரு சம்பவத்தைச் சொல்கிறேன். கவனமாகக் கேளுங்கள்” என்றவர், சொல்ல ஆரம்பித்தார்.

“காலை வேளையில் இரண்டு சிறுவர்கள் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் இருவரின் கைகளிலும் வாழைப்பழம் வைத்திருந்தனர். யார் வாழைப்பழத் தோலினை  அதிகத் தொலைவு வீசுவது என்று இருவருக்கும் போட்டி. இருவரும் மாற்றி மாற்றி வீசிவிட்டுச் சென்றார்கள்.

ஒரு முதியவர், அந்தச் சிறுவர்களிடம், ‘தோலை ரோட்டுல போட்டுட்டு போறீங்களே... குப்பைத்தொட்டியில போடலாமில்ல’ என்றார்.  ‘அக்கறை இருந்தா நீயே எடுத்துப் போடு தாத்தா’ என்றனர் சிறுவர்கள். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!