சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோருக்கு தண்டனை என்பது நிஜமா?

கேள்வி - பதில்

18 வயதுக்குக் குறைவானவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோருக்கு அபராதம் விதிக்கப்படும் என்று சொல்கிறார்களே. இது எந்த அளவுக்கு உண்மை?

நேதாஜி, திருவாரூர்


வி.எஸ்.சுரேஷ், வழக்கறிஞர்


‘‘18 வயதுக்குக் குறைவானவர்கள் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தினால், இதுநாள் வரை சிறார் நீதிமன்றத்தில் விசாரித்து, வாகனத்தை ஓட்டியவருக்கு அபராதம் மட்டும் விதித்து வந்தனர். சமீபத்தில், சென்னை அம்பத்தூரில் 16 வயதான மாணவர் ஒருவர், இருசக்கர வாகனம் ஓட்டிச் சென்று இன்னொருவர்மீது மோதியதில் விபத்தில் சிக்கியவரும் உயிரிழந்தார்; வாகனத்தை ஓட்டிய சிறுவனும் உயிரிழந்தார். இந்த வழக்கில், அந்த வாகனத்தின் உரிமையாளராகிய சிறுவனின் அம்மாவின்மீது பல பிரிவுகளில் வழக்குத் தொடுக்கப்பட்டது. 

ஆக, விபத்தை ஏற்படுத்திய சிறுவனுக்கு மட்டுமல்லாது, அந்த வாகனத்தின் உரிமையாள ரையும் அந்த விபத்துக்குப் பொறுப்பாளியாக்கி, அபராதம் அல்லது மூன்று மாதங்கள் வரை சிறைத் தண்டனை கொடுப்பதற்கு வாய்ப்புள்ளது. விபத்துக்கான இழப்பீட்டையும் வாகன உரிமையாளர்தான் தரவேண்டும்.’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!