நிதித் திட்டமிடலில் நீங்கள் கவனிக்க வேண்டிய 10 முக்கிய அம்சங்கள்!

சா.ராஜசேகரன், நிதி ஆலோசகர், Wisdomwealthplanners.comஓவியங்கள்: கோ.ராமமூர்த்தி

ன்றையக் காலகட்டத்தில் வளமான வாழ்க்கைக்கு நிதித் திட்டமிடல் என்கிற ஃபைனான்ஷியல் பிளானிங் மிக முக்கியம். நம் சம்பளத்தில் குறைந்தது 10% முதல் அதிகபட்ச மாக 30% வரை சேமிக்க வேண்டும் என்பது முக்கியமான விஷயம். இப்படிச் சேமிப்பதை நீண்ட காலத்தில் பணவீக்க விகிதத்தை விட அதிக வருமானம் தரும் திட்டங்களில் முதலீடு செய்வது அதைவிட முக்கியம்.

‘வாங்குற சம்பளத்துல எங்கே சார் சேமிக்க முடியுது. கடன் வாங்காம மாசத்தை ஓட்றதே பெரிய விஷயமால்ல இருக்கு’ என்று புலம்புவர்கள் பலர். இப்படிப் புலம்புகிறவர்கள் முதலில் பாசிட்டிவான மனநிலையைத் தங்களுக்குள் உருவாக்கிக்கொள்ள வேண்டும். முடியாது, முடியாது என்று நினைத்தால், நம்மால் ஒரு ரூபாய் கூட  சேமிக்க முடியாது. முடியும் என்று நினைத்து, சேமிக்கத் தொடங்கினால், நம்மால் நிச்சய மாக சில  நூறு ரூபாய்களையாவது சேமிக்க முடியும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்