லைஃப் இன்ஷூரன்ஸ்... - உண்மையைச் சொன்னால், க்ளெய்ம் சிக்கல் வராது!

முனைவர் க.நெல்லைசந்தர்

ற்போது பெரும்பாலானவர்கள் தங்களின் ரிஸ்க் அளவுக்கேற்ப லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசியை எடுக்கிறார்கள். இன்ஷூரன்ஸ் பாலிசியை எடுத்த வர்களின் எதிர்பார்ப்பு சில நேரங்களில்  பூர்த்தி அடையாமல் போய்விடுகிறது. எதிர்பாராத தருணத்தில் பாலிசிதாரர் இறந்த நிலையில் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் க்ளெய்ம் தொகையை நாமினிக்குக் கொடுக்க மறுக்கின்றன. அதன் விளைவாக பாலிசிதாரரின் குடும்பம் கடுமையான பணத்தட்டுப்பாட்டில் சிக்கிச் சீரழியும் நிலைக்குத் தள்ளப்படும் வாய்ப்புள்ளது.

பாலிசிதாரரின் மனைவி, மகன் மற்றும் மகளின் எதிர்காலம் இருண்டுபோய் சூனியமானதைப் போன்ற தோற்றம் காணப்படலாம். இந்த இக்கட்டான சூழ்நிலையில், இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் இறப்பு க்ளெய்ம் கிடையாது என்பதற்காகச்  சொல்லும் காரணங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக  இருந்தாலும், இறந்துபோன பாலிசிதாரரின் குடும்பம் சந்திக்கும் நிதிப் பிரச்னை மிகப் கொடுமையானது. இதற்கு என்ன தீர்வு?   

Do you like the story?

Please Appreciate the Author by clapping!