எஸ்ஸார் ஸ்டீல்... - இந்தியாவைச் சுரண்டும் குள்ளநரி முதலாளித்துவம்!

சுமதி மோகனப் பிரபு

டந்த சில காலமாகவே பொதுத்துறை வங்கிகளின் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. அடுத்தடுத்து வெளிவந்த, தனியார் வங்கி தலைவர்களின் மீதான பெரும் மோசடி குற்றச்சாட்டுகள், ஊழலில் தனியார், பொதுத்துறை என்ற பாகுபாடெல்லாம் கிடையாது என நிரூபிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக, ஒரு வங்கியில் கடன் பெறும் நிறுவனம், பல்வேறு காரணங்களால் சரிவரச் செயல்பட இயலாமல் போகும்போது, வட்டி மற்றும் அசலைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. தற்போது, இந்தியாவின் பொருளாதாரத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக விளங்கும், பல லட்சக்கணக்கான கோடி வாராக் கடன் சுமைக்கு முக்கியக் காரணங்களாக, பொருளாதார மந்த நிலை, கடன் வழங்குவதில் அரசியல் தலையீடு அல்லது ஊழல், கடன் முன்மொழிவுகள் வங்கியினால் முறையாக ஆய்வு செய்யப்படாதது மற்றும் நீரவ் மோடி, முகுல் சோக்சி, மல்லையா போன்றவர்களின் கடன் மோசடிகள் போன்றவைதான் என்று இதுவரை கருதப்பட்டு வந்துள்ளது. ஆனால், தற்போது, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் சி.இ.ஓ சாந்தா கோச்சர், அவரது கணவர் தீபக் கோச்சர், வீடியோகான் நிறுவனத் தலைவர் வேணுகோபால் தூத் தொடர்பான சர்ச்சைகள் குறித்து ஊடகங்களில் வெளிவரும் புதிய தகவல்கள், வாராக் கடன் முறைகேடுகள் பற்றிய புதிய கோணத்தினை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!