நிஃப்டியின் போக்கு: காலாண்டு முடிவுகளே சந்தையின் போக்கை நிர்ணயிக்கும்!

டிரேடர்ஸ் பக்கங்கள்டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

ந்து நாள்களும் சிறுகசிறுக ஏற்றத்தில் முடிவடைந்த நிஃப்டி வாரத்தின் இறுதியில் வாராந்திர ரீதியாக 149 புள்ளிகள் ஏற்றத்துடன் முடிவடைந்தது.

10480-க்கு மேலே வால்யூமுடன் தொடர்ந்தால் 10550 வரையில் சுலபத்தில் சென்றுவிடும் வாய்ப்பிருக்கும் சூழல் டெக்னிக்கல்கள் இருக்கின்றன. தொடர்ந்து ஏற்றம் வருவதற்கு செய்திகளும், நிகழ்வுகளும், காலாண்டு முடிவுகளும் கைகொடுக்க வேண்டும் என்பதை டிரேடர்கள் நினைவில் கொள்ளவேண்டும்.

இறக்கம் என்று பார்த்தால் 10400 மற்றும் 10300 வரையிலும் சென்று திரும்ப வாய்ப்புள்ளது. அதற்கும் கீழே வால்யூமுடன் இறங்க ஆரம்பித்தால் அனைத்து விதமான டிரேடர்களும் வியாபாரம் செய்வதை நிறுத்திக்கொள்வதே நல்லது.

சாதாரணமாக டெக்னிக்கல் சூழ்நிலைகள் இருப்பதைப் பார்த்தால் புதிய டிரேடர்களும் ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்களும் நல்ல ஃபண்டமென்டல்கள் உள்ள ஸ்டாக்குகளில் மட்டும் சிறிய அளவில் ஸ்டாக் ஸ்பெசிபிக் வியாபாரம் செய்துகொள்வதே நல்லது. டெக்னிக்கல்கள் அடிக்கடி பொய்யாகப்போய்விடும் வாய்ப்பு வரும் வாரத்தில் இருக்கிறது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்