ஃபண்ட் டேட்டா! - 19 - ஐ.டி.எஃப்.சி ஸ்டெர்லிங் ஈக்விட்டி ஃபண்ட்... - அதிக ரிஸ்க் எடுப்பவர்களுக்கு ஏற்ற ஃபண்ட்!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
சொக்கலிங்கம் பழனியப்பன் டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் (www.prakala.com)

.டி.எஃப்.சி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் பல பங்கு சார்ந்த திட்டங்கள் சமீப காலமாக நன்கு செயல்பட்டு வருகின்றன. இதற்கு முந்தைய சி.ஐ.ஓ கென்னத் ஆண்ட்ரேட் இருந்தபோதுகூட, ஐ.டி.எஃப்.சி பிரீமியர் ஈக்விட்டி போன்ற ஒருசில திட்டங்கள்தான் நன்றாகச் செயல்பட்டு வந்தன. அவர் விலகியபின்பு, ஃபண்ட் நிர்வாகத்தில் சற்றுத் தொய்வு ஏற்பட்டது. யூ.டி.ஐ மியூச்சுவல் ஃபண்டின் முன்னாள் சி.ஐ.ஓ-வான அனூப் பாஸ்கர் 2016-ல் இந்த ஃபண்ட் நிறுவனத்தின் சி.ஐ.ஓ-வாகப் பொறுப்பேற்றார்.

அதிலிருந்து ஏற்பட்ட மாற்றங்களின் காரணமாக, அந்த நிறுவனத்தின் பல ஃபண்டுகளும், ஐ.டி.எஃப்.சி ஸ்டெர்லிங் ஈக்விட்டி உட்பட, நன்றாகச் செயல்பட்டு வருகின்றன.

ஐ.டி.எஃப்.சி ஸ்டெர்லிங் ஈக்விட்டி ஃபண்டை சற்று விரிவாக நாம் இப்போது பார்ப்போம். இது ஒரு ஸ்மால் அண்டு மிட்கேப் ஃபண்டாகும். இந்த ஃபண்ட் தற்போது ரூ.2,600 கோடிக்கும் மேலான சொத்து களை நிர்வகித்து வருகிறது. தனது போர்ட் ஃபோலியோவில் கிட்டத்தட்ட 75 சதவிகிதத்தை ஸ்மால் அண்டு மிட்கேப் ஃபண்டு களிலும், எஞ்சியதை லார்ஜ்கேப் பங்குகளிலும் வைத்துள்ளது. இதனுடைய போர்ட்ஃபோலியோவில் கிட்டத்தட்ட 80 பங்குகளுக்கும் மேலாக உள்ளது. இது ஒரு ஸ்மால் அண்டு மிட்கேப் ஃபண்ட் என்பதால், போர்ட் ஃபோலியோ ரிஸ்க்கைக் குறைக்க அதிக எண்ணிக்கையில் பங்குகளை வைத்துள்ளது. எந்தவொரு பங்கும் போர்ட் ஃபோலியோவில் 5 சதவிகிதத்துக்கு அதிகமாக இல்லை. இதனால் கான்சென்ட் ரேஷன் ரிஸ்க் இந்த ஃபண்டிற்குக் கிடையாது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick