அங்காடித் தெரு - 18 - சகலமும் கிடைக்கும் தஞ்சாவூர் கீழவாசல்! | Market street - Nanayam Vikatan | நாணயம் விகடன்

அங்காடித் தெரு - 18 - சகலமும் கிடைக்கும் தஞ்சாவூர் கீழவாசல்!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

டுகு தொடங்கிக் கல்யாணத்திற்குத் தேவையான மளிகைப் பொருள்கள் வரை, வீடுகட்டுவதற்குத் தேவையான மரச்சாமான்கள் முதல் புதுவீடு கட்டி கிரஹப்பிரவேசத்தில் செய்யப்படும் கணபதி ஹோமத்திற்கான பொருள்கள் வரை, கற்களால் செய்யப்படும் சாமிச் சிலைகள் தொடங்கி மண்ணைக்கொண்டு செய்யப்படும் மண்பானை வரை, பித்தளைப் பாத்திரங்கள் முதல் இரும்புச் சாமான்கள் வரை அனைத்தும் ஒரே இடத்தில் கிடைப்பது தஞ்சாவூரின் மிக முக்கிய அடையாளமாக விளங்கும் கீழவாசலில்தான்.

தஞ்சாவூர் நகரத்தின் மொத்த சுற்றளவே சுமார் 10 கிலோமீட்டர்தான் இருக்கும். தஞ்சாவூரின் மையப்பகுதியில் உள்ளது அரண்மனை. இந்த அரண்மனையைச் சுற்றியுள்ள பகுதிகளைத் தெற்கு வீதி, கீழவீதி, வடக்கு வீதி, மேல வீதி எனப் பெயரிடப்பட்டு, நான்கு வீதிகளாக மன்னர்கள் காலத்திலேயே பிரிக்கப்பட்டிருக்கின்றன. இந்த நான்கு வீதிகளில்தான் முக்கியக் கடைத்தெருக்கள் இருந்தன. மிகப் பெரிய வர்த்தகம் நடக்கும் பகுதியாக இந்த வீதிகள் வரலாற்றில் இருந்துவந்திருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick