பிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 7

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ரவி சுப்ரமணியன் (GOD IS A GAMER - Published by Penguin Random House India Pvt Ltd)ஓவியங்கள்: ராஜன்

தினாறாவது மாடியிலிருக்கும் நவநாகரிகமான இண்டிஸ்கேப் கேமிங் கார்ப்பரேஷனுக்குள் நுழைந்தார் ஆதித்யா. இந்த நிறுவனம் தொடங்கி சுமார் 18 மாதங்கள்தான் ஆகியிருக்கிறது; இதற்குள் இந்தியாவில் அதிகமாக விசிட் செய்யும் கேமிங் வலைதளங்களில் இண்டிஸ்கேப்.காமும் ஒன்றாக மாறிவிட்டது.

ஆதித்யா உள்ளே நுழைந்தபோது அலுவலகத்தின் வலதுபக்கத்திலிருந்து பெரிய போர்டு ஒன்றில் அவருடைய மேற்கோள்களில் ஒன்று இடம் பெற்றிருந்தது. ‘எளிமையாகவும், சுவாரஸ்யமாகவும் வைத்திருங்கள். வாடிக்கையாளரை மகிழ்விப்பதில் கவனம் செலுத்துங்கள். அவர்கள் விளையாடுவதை விரும்பும்பட்சத்தில் வருமானம் வரஆரம்பிக்கும்’ என்பதுதான் அது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick