சொந்த வீடு... வரிசைகட்டும் வரிச் சலுகைகள்! - பயன்படுத்திக்கொள்ளத் தயாரா?

ப.முகைதீன் சேக்தாவூது

நிறைவடைந்த 2017-2018-ம் நிதியாண்டுக்கு வரிக் கணக்குத் தாக்கல் செய்வதற்குரிய படிவங்களில் சிலபல மாற்றங்களைச் செய்து புதிய படிவங்களை வெளியிட்டுள்ளது வருமான வரித் துறை. அதிலும் குறிப்பாக, மாதச் சம்பளம் வாங்குகிறவர்கள் வரிக் கணக்குத் தாக்கல் செய்யும் ஐ.டி.ஆர்-1 (ITR-1 SAHAJ) படிவத்தில் முன்பைவிட கூடுதல் விவரங்களை வரிதாரர் நிரப்பவேண்டியது அவசியமாக்கப் பட்டுள்ளது. அதன்படி, சம்பளம், படிகள், நிறுவனம் செய்துதரும் வாழ்க்கை வசதிகள் (Perquisites) போன்றவற்றை  தனித்தனியே சமர்ப்பிப்பது அவசியம்.

இதில், மாதச் சம்பளம் வாங்குபவர்கள் கூடுதல் கவனம் செலுத்தவேண்டியது, வரி விலக்கு பெறும் படிகள் (Tax exempted allowances) மற்றும் வீட்டுச் சொத்தின் மூலம் கிடைக்கும் வருமானம் ஆகியவற்றில்தான். ஏனெனில், இந்த விவரங்கள் புதிய வரிக் கணக்குத் தாக்கல் படிவத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளன. எனவே, வரிக் கணக்குத் தாக்கல் தேதிக்குமுன் இவை பற்றிய தெளிவினை நாம் பெறுவது அவசியம். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick