கம்பெனி டிராக்கிங்

அவந்தி ஃபீட்ஸ் லிமிடெட்!(NSE SYMBOL: AVANTIFEED)டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

விசாகப்பட்டினத்தைப் பதிவு அலுவலக மாகவும், ஹைதராபாத்தைத் தலைமையகமாகவும் கொண்டு செயல்படும் நிறுவனம் அவந்தி ஃபீட்ஸ் லிமிடெட்.  1993-ம் ஆண்டு தாய்வானைச் சேர்ந்த பின்டகி என்டர்பிரைசஸ் என்னும் நிறுவனத்துடன் கூடிய தொழில்நுட்ப ஒப்பந்தத்துடன் ஆரம்பிக்கப்பட்டது இந்த நிறுவனம்.

அவந்தி நிறுவனம் தாய்லாந்தைச் சேர்ந்த  உலக அளவில் மிகப்பெரிய மீன்களுக்கான தீவனம் தயாரிப்பு, இறால் வளர்ப்பு, கடல்சார் உணவினைப் பதனிடுதல் மற்றும் ஏற்றுமதி செய்தல் தொழில்களில் ஈடுபட்டிருக்கும் தாய் யூனியன் ப்ரோசன் புராடக்ட்ஸ் பிஎல்சி எனும் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. தாய் ஃபீட்ஸ், அவந்தி நிறுவனத்தில் பங்குகள் வைத்திருத்தல், தொழில்நுட்பக் கூட்டணி மற்றும் மார்க்கெட்டிங்கிற்கான உத்திகளைத் தருதல் போன்ற பல விஷயங்களிலும் இணைந்து செயல்பட்டு வருகிறது.

இந்த நிறுவனம் இறால் மற்றும் மீன்களுக்கான தீவனங்கள் தயாரிப்பதற்காக நான்கு உற்பத்தி வசதிகளை தன்வசத்தே கொண்டுள்ளது.  ஆந்திரப் பிரதேசத்தில் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் இருக்கும் கொவ்வூர், வேமுலூரு, பந்தாபுரம் போன்ற இடங்களில் தலா ஒன்றும்,  குஜராத்தில் வல்சத் மாவட்டத்தில் இருக்கும் பார்டி எனும் இடத்தில் ஒன்றுமாக நான்கு உற்பத்தி மையங்களைக் கொண்டுள்ளது. இந்த நான்கு உற்பத்தி மையங்கள் மூலம் சுமார் நான்கு லட்சம் மெட்ரிக் டன் அளவிலான இறால் மற்றும் மீன் களுக்கான தீவனத்தை உற்பத்தி செய்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick