ஏ.டி.எம் பணத்தட்டுப்பாடு... என்னதான் காரணம்? | No cash in ATMs - Why is there a shortage? - Nanayam Vikatan | நாணயம் விகடன்

ஏ.டி.எம் பணத்தட்டுப்பாடு... என்னதான் காரணம்?

2016, நவம்பரில் கிலோ மீட்டர் தூரத்துக்கு ஏ.டி.எம்-களில் பணம் எடுக்க மக்கள் காத்துக் கிடந்ததைப் போன்றதொரு காட்சியை கடந்த வாரத்தில் மீண்டும் பார்க்க முடிந்தது. வட இந்தியாவின் பல மாநிலங்களில், தென் இந்தியாவில் தமிழகம் நீங்கலாகப் பிற மாநிலங்களில், ஏ.டி.எம்-களில் பணமே இல்லாமல் போகிற அளவுக்கு மக்கள் பணத்தை எடுத்தனர். இதற்கு என்ன காரணம் என அகில இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சி.ஹெச்.வெங்கடாசலத்திடம் கேட்டோம். 

“பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப்பிறகு இரண்டாயிரம் ரூபாய் நோட்டை அச்சிட முடிவு செய்ததே முதல் தவறு. கறுப்புப் பணத்தை ஆயிரம் ரூபாய் நோட்டுகளாகப் பதுக்குகிறார்கள் என்றுதான் ஆயிரம் ரூபாய் நோட்டை ஒழித்தார்கள். அதற்குப் பதிலாக 2000 ரூபாய் நோட்டைக் கொண்டுவந்தால், இப்போது மிக எளிதாகப் பணத்தைப் பதுக்கலாம். இப்படிப் பலரும் பதுக்கியதால் தான், இப்போது 2000 ரூபாய் நோட்டுகளுக்குத் தட்டுப்பாடு வந்திருக்கிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick