பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

டாக்டர் சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர், குரோத் அவென்யூஸ் (GROWTH AVENUES), மும்பை. SEBI Registration (Research Analyst) INH000001964

இண்டெக்ஸ்

இந்த வாரமும் இந்தியப் பங்குச் சந்தையில் ஏற்றமே காணப்பட்டது. வாரத்தின் தொடக்க நாளிலேயே சிரியா போர் குறித்த செய்திகள் வெளியானாலும், சந்தை அதனைக் கண்டுகொள்ள வில்லை. அதைத் தொடர்ந்து  கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் நல்ல செய்திகள் இல்லாத நிலையையும் வாரம் முழுவதும் சமாளித்து சந்தைத் தனது ஏற்றமான போக்கைத் தக்க வைத்துக்கொண்டது.

பங்குச் சந்தையைப் பொறுத்தவரை,  சாதகமான உணர்வுகள் (சென்டிமென்ட்) மிகையாக இருக்கும் போது நெகட்டிவ் செய்திகள் எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்பது அனைவரும் அறிந்த உண்மை. சந்தை இப்போதைக்குக் கீழே செல்ல விரும்பாததே, சந்தையானது தொடர்ந்து ஏற்றத்தின் போக்கில் செல்லும் என்பதற்கான சிக்னலாக உள்ளது.

இந்த வாரத்தின் மிகப் பெரிய ஏமாற்றம் என்றால், அது வங்கிகளின் மோசமான செயல்பாடுகள்தான். சில பொதுத் துறை வங்கிகளின் (அவற்றில் சில, அதன் அதிகபட்ச குறைந்த விலையைவிட இறக்கம் கண்டன) தத்தளிப்பு தொடர்ந்ததுடன்,   தனியார் வங்கிகளும்கூட அவற்றின் ஏற்றப் போக்கைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ள முடியாமல் போய், அது பேங்க் இண்டெக்ஸில் எதிரொலித்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick