நிஃப்டியின் போக்கு: திசை தெரியாத நிலை தொடர்ந்தால் வியாபாரத்தைத் தவிருங்கள்!

டிரேடர்ஸ் பக்கங்கள்டாக்டர் எஸ்.கார்த்திகேயன்

ந்தையானது  10500-550 லெவல்களில் நிஃப்டி கொஞ்சம் திணற ஆரம்பிப்பதைப் போன்ற சூழலே தென்படுகிறது. திசை தெரியாத நிலை தொடர்ந்தால், அனைத்து விதமான டிரேடர்களும் வியாபாரம் செய்வதை நிறுத்திக்கொள்வதே நல்லது. தற்போதைய சூழ்நிலையில் உருவாகும் திசை தெரியாத நிலைமை சந்தேகம் ஏற்படுத்துவதாக இருக்கிறது. ஏப்ரல் மாத எஃப் & ஓ எக்ஸ்பைரி வரும் வாரத்தில் இருக்கிறது.

டெக்னிக்கலாக சிக்கலான சூழலில் நிஃப்டி இருக்கிறது. ஏற்றம் கண்டால் 10650, இறக்கம் வந்தால் 10300 என்ற நிலைமை உருவாகத் தொடங்கியிருகிறது. செய்திகள், காலாண்டு நிதிநிலை அறிக்கைகள் மற்றும் அவை குறித்த எதிர்பார்ப்புகள் போன்றவையே சந்தையின் போக்கை நிர்ணயிக்கும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick