பிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 21

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ரவி சுப்ரமணியன்,(GOD IS A GAMER - Published by Penguin Random House India Pvt Ltd)ஓவியங்கள்: ராஜன்

மாள்விகாவின் மரணம் குறித்து அனைத்து முக்கியமான நாளேடுகளும், நிதி சம்பந்தப்பட்ட செய்தித்தாள்களும் முதல் பக்கச் செய்தியாக வெளியிட்டிருந் தன. அவரது மரணம் பின்னிரவில் நடந்திருந்தாலும், அனைத்துச் செய்தித் தாள்களும் அந்தக் கொடூரமான சம்பவத்தின் விவரங்களை எழுதியிருந்தன.  ஹோட்டலின் நடைபாதையில் சிதறிக் கிடந்த அவரது உடலின் புகைப்படம் அனைத்துச் செய்தித்தாள்களிலும், இணையதளங்களிலும் வெளியாகி யிருந்தது. இதற்கெல்லாம் ஒருபடிமேல், பார்ட்டியில் கலந்துகொண்டவர்களிடம் என்ன நடந்தது எனக் கேட்டறிந்து, அந்த நிகழ்வு குறித்த பல துண்டுச் செய்திகளை ஒன்றிணைத்து நிமிடத்துக்கு நிமிடம் செய்தியைத் தந்துகொண்டிருந்தன தொலைக்காட்சிகள். பலபேர்களுக்கு முன்பாக இந்தச் சம்பவம்  நடந்திருந்தாலும் கூடக் கொஞ்சம் `மசாலா’வை சேர்த்துத் தந்துகொண்டிருந்தன ஊடகங்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்