கடன் சுமையில் ஐ.எல் & எஃப்.எஸ்... முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

டன் சுமையில் தள்ளாடும் ஐ.எல் அண்டு எஃப்.எஸ் நிறுவனத்தில் அதிக பங்குகளைக் கொண்டிருக்கிறது ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி. இந்த நிலையில், அந்த நிறுவனத்தின் தலைவர் பதவியில் தனது நிர்வாக இயக்குநரையே நியமித்து, அந்த நிறுவனத்தின் மீதான தனது பிடியை இறுக்கியுள்ளது எல்.ஐ.சி.

இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லீஸிங் அண்டு ஃபைனான்ஷியல் சர்வீசஸ் (IL&FS) என்ற இந்த நிறுவனம், இந்தியாவின் பங்குச் சந்தையில் பட்டியலிடப்படாத மிகப்பெரிய உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனமாகும். எல்.ஐ.சி, ஜி.ஐ.சி, யு.ஐ.ஐ மற்றும் என்.ஐ.சி உள்ளிட்ட நான்கு பொதுத்துறைக் காப்பீட்டு நிறுவனங்களுடன் கூட்டுச் சேர்ந்து, உள்கட்டமைப்பு தொடர்பான திட்டங்களுக்கு நிதிச் சேவை அளித்துவரும் தொழிலில் பிரதானமாக ஈடுபட்டு வருகிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்