கடன்... கஷ்டம்... தீர்வுகள்! - 8 - சின்னச் சின்ன தவறுகள்... சிக்கலை அவிழ்க்கும் தீர்வுகள்! | Financial Tips For Young Adults - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (05/08/2018)

கடன்... கஷ்டம்... தீர்வுகள்! - 8 - சின்னச் சின்ன தவறுகள்... சிக்கலை அவிழ்க்கும் தீர்வுகள்!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

ஓவியம்: ராஜேந்திரன்

நிறைய இளைஞர்கள் மிகச் சிறிய வயதிலேயே பண நிர்வாகத்தில் பட்டையைக் கிளப்புகிறார்கள். ஆனாலும், அவர்கள் சின்னச் சின்ன மாற்றங்களைச் செய்துகொண்டால், எதிர்காலத்தில் எந்தவிதமான சிக்கலும் இல்லாமல் வாழ முடியும். சென்னையில் பணியாற்றும் இளைஞர் ஒருவர் தன் பிரச்னையைச் சொல்கிறார்....

‘‘என் பெயர் தர்மராஜ். வயது 27. எனக்குச் சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கிராமம். எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் சாஃப்ட்வேர் இன்ஜினீயராக உள்ளேன். மாதம் ரூ.75 ஆயிரம் சம்பளம்.

என் அப்பா பிழைப்புத் தேடி மதுரைக்கு வந்து வியாபாரம் செய்யவந்த வகையில் 20 வருடங்களுக்குமுன்பே நாங்கள் மதுரையில் குடியேறினோம். அண்ணன், அக்கா, தம்பி, தங்கை, நான் என மொத்தம் நாங்கள் ஐந்து பேர். அக்காவிற்கு 2015-ல் திருமணம் ஆனது. அப்பா சைக்கிள் மூலம் அலுமினியப் பாத்திரங்கள் விற்று எல்லோரையும் படிக்க வைத்தார். அம்மா இல்லத்தரசி. அவ்வப்போது 100 நாள் வேலைத் திட்டத்தில் வேலை செய்பவர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close