ஓய்வுக்காலத்தில் ரூ.2 கோடி சாத்தியமா?

கேள்வி - பதில்

என் வயது 45. மாதச் சம்பளம் 75,000 ரூபாய். 58 வயதில் பணி ஓய்வு பெறும்போது ரூ.2 கோடி தொகுப்பு நிதியை உருவாக்கத் தேவையான ஆலோசனை கூறவும்.

கோதண்டராமன், கோபி செட்டிப்பாளையம்

ஸ்ரீகாந்த் மீனாட்சி,

துணை நிறுவனர், ஃபண்ட்ஸ் இந்தியா


“இன்னும் 13 வருடங்களில் ரூ.2 கோடி தொகுப்பு நிதியை உருவாக்குவது அவ்வளவு சுலபமல்ல. ஆண்டுதோறும் சராசரியாக 12% வருமானம் கிடைத்தால்கூட, மாதாமாதம் சுமார் ரூ.56,000 முதலீடு செய்தால்தான் உங்கள் இலக்கை எட்ட முடியும். உங்கள் வருமானம் ரூ.75,000 என்கிறபோது அது சாத்தியமா என்று தெரிய வில்லை. ஆனால், நீங்கள் ரூ.1 கோடிக்கு முயற்சி செய்தால், மாதமொன்றுக்கு ரூ.25,000 முதலீடு செய்து, இலக்கை எட்டுவது சாத்தியம். வருடம் 12% லாபம் கொடுக்கும் பங்குச் சந்தை சார்ந்த திட்டங்களில் நீங்கள் முதலீடு செய்யலாம்.’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!