“இன்னும் பல சாதனைகளை நம்மால் செய்ய முடியும்!” - ஸ்ரீதர் வேம்பு, சி.இ.ஓ, ஜோஹோ கார்ப்பரேஷன் | We can do many more achievements! - Says Sridhar Vembu CEO of Zoho corporation - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (05/08/2018)

“இன்னும் பல சாதனைகளை நம்மால் செய்ய முடியும்!” - ஸ்ரீதர் வேம்பு, சி.இ.ஓ, ஜோஹோ கார்ப்பரேஷன்

ஏ.ஆர்.குமார்

புளூ ஜீன்ஸ், கறுப்பு ஜிப்பா என வித்தியாசமான உடையில் காட்சி அளிக்கிறார் சென்னையைத் தலைமை யகமாகக் கொண்டு இயங்கும் ஜோஹோ காப்பரேஷன் நிறுவனத்தின் சி.இ.ஓ ஸ்ரீதர் வேம்பு. கும்பகோணத்துக்காரரான இவர், மூன்று மாதங்களுக்கொருமுறை அமெரிக்காவிலிருந்து சென்னைக்கு வந்து, ஜோஹோவின் திட்டங்கள் குறித்து விரிவான வழிகாட்டுதல்களைத் தந்து விட்டுச் செல்கிறார். அவர் இந்தமுறை  சென்னைக்கு வந்திருந்தபோது நாணயம் விகடனுக்கு சிறப்புப் பேட்டி அளித்தார். இனி அவர் நமக்களித்த பேட்டி...

பிசினஸ் நிறுவனங்களுக்கு உதவுகிற வகையில் நீங்கள் அறிமுகப்படுத்திய ஜோஹோ ஒன் (Zoho One) என்கிற சாஃப்ட்வேர் வெற்றி பெற்றுள்ளதா?

‘‘பெரிய வெற்றி கண்டிருக்கிறோம். கடந்த ஓராண்டு காலத்தில் உலகம் முழுக்க 12 ஆயிரம் தொழில் நிறுவனங்கள் ‘ஜோஹோ ஒன்’ சாஃப்ட்வேரைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன. பெரிய நிறுவனங்கள் மட்டுமல்ல, சிறிய, நடுத்தர நிறுவனங்களான எஸ்.எம்.இ நிறுவனங்கள் கூட இதைப் பயன்படுத்துகின்றன. இந்த சாஃப்ட்வேரைப் பயன்படுத்தும் நிறுவனங் களில் ஏறத்தாழ 36% நிறுவனங்கள் இந்திய நிறுவனங்கள் ஆகும். பொதுவாக, இது மாதிரியான  சாஃப்ட்வேரை 5-10% இந்திய நிறுவனங்கள்தான் பயன்படுத்தும். 36% என்பது எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் எண். இன்னும் அதிகமான தொழில் நிறுவனங்களைச் சென்றடைய வேண்டும் என்பதே எங்கள் இலக்கு.’’

[X] Close

[X] Close