ஒரு புத்தகம், 25 பிசினஸ் பாடங்கள்!

ரு புத்தகத்தின்மூலம் ஒன்றிரண்டு பிசினஸ் பாடங்களைச் சொல்லலாம். ஆனால், பிராண்ட் நிபுணரான அம்பி பரமேஸ்வரன் எழுதிய புத்தகத்தில் 25 பிசினஸ் பாடங்கள். அவர் எழுதிய ‘ஸ்பான்ஜ்: லீடர்ஷிப் லெசன்ஸ் ஐ லேண்ட் ஃப்ரம் மை க்ளையன்ட்’ என்கிற புத்தகத்தின்மூலம்  விளம்பர உலகில் தனது நாற்பதாண்டு கால  அனுபவங்களை பிசினஸ் பாடங்களாக எடுத்துச்சொல்ல, புத்தக விரும்பிகளின் மத்தியில் ஹிட்டடித்திருக்கிறது இந்தப் புத்தகம்.

மும்பை, டெல்லி, பெங்களூரு என பல ஊர்களில் இந்தப் புத்தகத்தை வெளியிட்டபின், தனது சொந்த ஊரான சென்னையில் வெளியிட்டு அறிமுகம் செய்ய வந்திருந்தார் இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் அம்பி பரமேஸ்வரன். சென்னை, அண்ணா சாலைக்குப் பக்கத்திலுள்ள மெட்ராஸ் மேனேஜ்மென்ட் அசோசியேஷன் இந்தப் புத்தக அறிமுக விழாவை ஏற்பாடு செய்திருந்தது.

இந்தப் புத்தக அறிமுக விழாவில் பேசிய அம்பி பரமேஸ்வரன், இந்தப் புத்தகத்துக்கு ‘ஸ்பான்ஜ்’ (Sponge) எனப் பெயர் வைத்ததன் காரணத்தைச் சொன்னார். ‘‘ஸ்பான்ஜ் என்பது கடலில் அடியில் வளரும் நுட்பமான தாவரம். கெட்டதை உள்வாங்கிக்கொண்டு நல்லதை மட்டுமே வெளியிடும் அற்புதமான படைப்பு அது. எனக்கும் பலவிதமான அனுபவங்கள் இருந்தாலும், அவற்றில் நல்ல பிசினஸ் பாடங்களை இந்தப் புத்தகத்தில் தந்திருக்கிறேன்’’ என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்