வகைகள் முதல் வரிச் சலுகை வரை... கடைசி வரை கைகொடுக்கும் பென்ஷன்!

ப.முகைதீன் சேக்தாவூது

‘இன்றுபோல் என்றும் வாழ வேண்டும்’ என்பது எல்லோருடைய ஆசை. இதில் ‘என்றும்’ என்ற வார்த்தையில் ‘முதுமைக்காலம்’ அடங்கும் என்பதை நம்மில் பலரும் புரிந்துகொள்வதில்லை.

வாழ வேண்டும் என்ற ஆசையை நம்மிடம் வளர்த்து விடுவதுபோல, நம் ஆயுள் காலமும்  நீண்டுகொண்டே போகிறது. உதாரணமாக, நம் நாடு சுதந்திரம் பெற்றபோது 37 என இருந்த சராசரி வயது, இப்போது இரு மடங்காகி நிற்கிறது. இது, மேலும் நீளக்கூடும் என்பதே மருத்துவ அறிவியல் சொல்லும் உண்மை. எனவேதான், பென்ஷன் என்பதைக் குறித்து நாம் சிந்தித்தாக வேண்டிய மிக முக்கியமான காலகட்டத்தில் இருக்கிறோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!