கடன்... கஷ்டம்... தீர்வுகள்!- 9 - சுமக்கும் கடன்கள்... பெரிய கனவுகள்! | Financial Tips For Young Adults - Nanayam Vikatan | நாணயம் விகடன்

கடன்... கஷ்டம்... தீர்வுகள்!- 9 - சுமக்கும் கடன்கள்... பெரிய கனவுகள்!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ஓவியம்: ராஜேந்திரன்

‘‘நம் ஒவ்வொருவருக்கும் பணத்தை நிர்வகிக்கும் அவசியத்தைக் கற்றுத் தரும்  நாணயம் விகடனுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என ஆரம்பித்த திருச்சியைச் சேர்ந்த ரவிக்கு இப்போது 28 வயது.

‘பண நிர்வாகத்தை நான் சரியாகத்தானே செய்கிறேன்’ எனச் சிலர் நினைப்பார்கள்.  ஆனால், குறைந்த வட்டிக்குக் கடன் வாங்கும் வாய்ப்பு கண்முன்னே இருந்தும், அதைக் குறித்த சிந்தனையில்லாமல் அதிக வட்டிக்குக் கடனை வாங்குவார்கள். நிறைய கடனை வைத்துக்கொண்டு பெரிய கனவுகளைக் காண்பார்கள். அந்த வரிசையில் ரவியும் ஒருவர் என்பதை அவர் சொல்வதை வைத்தே புரிந்துகொள்ளலாம். ரவி என்ன சொல்கிறார் எனப் பார்ப்போம்.

“நான் தனியார் நிறுவனம் ஒன்றில் இன்ஜினீயராக இருக்கிறேன். என்னுடைய மாதச் சம்பளம் ரூ.42,500.

என் மனைவி, வீட்டுப் பொறுப்பைக் கவனித்து வருகிறார். எங்களுடன் என் அம்மா இருக்கிறார். அவருக்கு பென்ஷன் தொகை ரூ.2,000 வருகிறது.

பெரிய பிசினஸ் செய்ய வேண்டும் எனக்கு ஆசை.  எனக்குச் சொந்தமாக ரூ.30 லட்சம் மதிப்பில் வீடு உள்ளது. அதன்மூலம் வாடகை வருமானமாக ரூ.6,000 வருகிறது.

பர்சனல் லோன் ரூ.1.7 லட்சம் அம்மாவின் மருத்துவச் செலவுகளுக்காக 2016-ல் வாங்கினேன். மாதம் ரூ.3,855 இ.எம்.ஐ செலுத்திவருகிறேன். இந்தக் கடன் ஜூன் 2022-ல் முடிவடையும்.

கடந்த ஆண்டு என்னுடைய திருமணச் செலவுகளுக்காக வீட்டு அடமானக் கடனாக 10.14% வட்டியில் ரூ.5 லட்சம் வாங்கினேன். இதற்கான    இ.எம்.ஐ ரூ.5,642 செலுத்தி வருகிறேன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick