இன்ஷூரன்ஸ் நிறுவனங்களில் கோரப்படாத ரூ.15,167 கோடி... திரும்பப் பெற என்ன வழி?

எல்.ஐ.சி உள்பட பல்வேறு ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களில் பாலிசிதாரர்களால் க்ளெய்ம் செய்யப் படாத தொகை சுமார் ரூ.15,167 கோடி வரை கிடப்பதாகத் தெரிவித்துள்ளது இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம். அவ்வாறு க்ளெய்ம் செய்யாத நபர்கள் யார் யார் என்பதைச் சம்பந்தப்பட்ட பாலிசிதாரர் கள் அல்லது பயனாளிகள் தெரிந்துகொள்ளும் வகையில் அதுகுறித்த தகவலை இணையதளத்தில் வெளியிடுமாறு அறிவுறுத்தியுள்ளது இன்ஷூரன்ஸ் கட்டுப்பாட்டு வாரியமான ஐ.ஆர்.டி.ஏ.ஐ.

பல்வேறு காரணங்களால் 23 ஆயுள் காப்பீடு நிறுவனங்களிடம் கடந்த மார்ச் 31-ம் தேதி நிலவரப்படி, கேட்பாரற்று கிடக்கும் தொகை ரூ.15,167.47 கோடி எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது. இவ்வாறு உரிமை கோராமல் இருக்கும் பணத்தை அதிகம் கொண்டு முதலிடத்தில் இருக்கிறது  எல்.ஐ.சி நிறுவனம். இந்த நிறுவனத்தில் ரூ.10,509 கோடி உரிமை கோரப்படாமல் உள்ளது.

அடுத்து, 22 தனியார் காப்பீட்டு நிறுவனங்களிடம் ரூ.4,657.45 கோடி உள்ளது. இதில் தனியார் ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தில் ரூ.807.4 கோடியும், ரிலையன்ஸ் நிப்பான் லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தில் ரூ.696.12 கோடியும், எஸ்.பி.ஐ. லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தில் ரூ.678.59 கோடியும் மற்றும் ஹெச்.டி.எஃப்.சி லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தில் ரூ.659.3 கோடியும் கேட்பாரற்றுக் கிடக்கின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick