மணி பேக் பாலிசி சரியான இன்ஷீரன்ஸ் திட்டமா?

லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசிகளில் மணி பேக் பாலிசி சிறந்த காப்பீட்டுத் திட்டமாக நம் மக்களால் கருதப்படுகிறது.  இந்த பாலிசியில் ஆயுள் காப்பீடு மற்றும் குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு ஒரு முறை, குறிப்பிட்ட தொகை பாலிதாரருக்கு வழங்கப்படுகிறது. பாலிசி முதிர்ச்சி அடையும் வரை இந்தத் தொகை வழங்கப் படுகிறது. பாலிசி முதிர்ச்சி அடைந்தவுடன், முதிர்ச்சித் தொகை பாலிசிதாரருக்கு வழங்கப்படுகிறது.

இந்த பாலிசி மூலமான இடைக்கால தொகை, பாலிதாரர் உயிருடன் இருந்தால்தான் வழங்கப்படும். எதிர்பாராதவிதமாக பாலிசிதாரர் இறந்துவிட்டால், அந்த பாலிசியின் முதிர்ச்சித் தொகை, பாலிதாரரின் வாரிசுக்கு வழங்கப்படும்.

மணி பேக் பாலிசி மற்ற ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களைப் போன்று பாலிசிதாரருக்கு ஆயுள் காப்பீடும், வருமானமும் அளிப்பதாக உள்ளது. எனவே, இந்தத் திட்டம் சிறந்த முதலீட்டுத் திட்டமாகவும் மக்களால் பார்க்கப்படுகிறது. மேலும், இந்தத் திட்டத்திலிருந்து முதிர்வுக் காலத்திற்குமுன்பே முடித்துக் கொள்ளும் வசதியும் உள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick