வெளிநாட்டில் இறக்கம்... உள்நாட்டில் ஏற்றம்... என்ன ஆகும் தங்கம் விலை? | Gold price will Increase or decline in India in the future? - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளிநாட்டில் இறக்கம்... உள்நாட்டில் ஏற்றம்... என்ன ஆகும் தங்கம் விலை?

ஷியாம் சுந்தர், கமாடிட்டி நிபுணர்

மிகவும் வித்தியாசமான காலகட்டத்தில், தங்கம் வர்த்தகமாகிக்கொண்டிருக்கிறது. சர்வதேசச் சந்தையில் தங்கம் விலை குறைந்துவருகிறது. கடந்த ஒரு மாத காலத்தில் ஒரு ட்ராய் அவுன்ஸ் தங்கம் விலை (சுமார் 32 கிராம்) 44 டாலர்களும், ஆறு மாத காலத்தில் 103 டாலர்களும், ஒரு வருட காலத்தில் 63 டாலர்களும், கடந்த ஐந்தாண்டு காலத்தில் 103 டாலர்களும் குறைந்துள்ளது.

இதே காலத்தில், உள்நாட்டில் ஆபரணத் தங்கத்தின் விலை  அதிகரித்திருக்கிறது. 2017 ஆகஸ்ட் 1-ம் தேதியன்று 22 கேரட் தங்கம் ஒரு கிராம் விலை ரூ.2,736-ஆக இருந்தது. இந்த ஆண்டின் ஜனவரி 1-ம் தேதியன்று ரூ.2,807-ஆக இருந்தது. ஒரு மாதத்துக்குமுன் ரூ.2,913-ஆக இருந்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick