குறைந்த விலையில் தரமான மருத்துவக் கருவிகள்... மெடிக்கல் துறையில் கலக்கும் வி-டைட்டன்! | V Titan provides Quality medical equipment at low prices - Nanayam Vikatan | நாணயம் விகடன்

குறைந்த விலையில் தரமான மருத்துவக் கருவிகள்... மெடிக்கல் துறையில் கலக்கும் வி-டைட்டன்!

ற்போது நமது மருத்துவமனைகளில் அவசர கால சிகிச்சைப் பிரிவில் பயன் படுத்தப்படும் பெரும்பாலான மருத்துவக் கருவிகள் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுபவைதான். காரணம், நம் நாட்டில் இன்னும் அந்தளவுக்குத் தரமான கருவிகள் உற்பத்தி செய்யப்படுவதில்லை. தவிர, வெளிநாடுகள் அளவுக்கு விலை குறைவாகக் கொடுக்க முடியாது. இந்த இரண்டு சவால்களையும் எதிர்கொண்டு, இந்தியாவின் மெடிக்கல் டெக்னாலஜி துறையில் மிக வேகமான வளர்ச்சியைக் கண்டுவருகிறது சென்னையைச் சேர்ந்த வி-டைட்டன் நிறுவனம். இந்தத் துறையில் இருக்கும் சவால்கள் குறித்தும், இந்த நிறுவனம் கண்டுவரும் வளர்ச்சி குறித்தும், இதன் நிறுவன ரான பெரின்குளம் கஸ்தூரி நம்மிடம் எடுத்துச் சொன்னார்.

“இந்த நிறுவனத்தைத் தொடங்கு வதற்குமுன் மருத்துவத் துறைக்கும், எனக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. ஆனால், தொழில் நுட்பத் துறையில் எனக்கு நிறைய அனுபவமுண்டு. சில துறைகள், காலத்திற்குத் தகுந்தாற்போல ஏற்ற இறக்கங்களுடன் இருக்கும்; ஆனால், மருத்துவத் துறை அப்படி யல்ல; நிரந்தரமானது. எப்போதும் இதற்கான தேவை இருந்து கொண்டே இருக்கும். எனவே, பயப்படாமல் இதற்குள் இறங்கலாம் என முடிவு செய்தேன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick