ஒரு லட்சம் கோடி டாலர்... அதிசயிக்க வைக்கும் ஆப்பிள்!

சுமதி மோகனப் பிரபு

டந்த ஆகஸ்ட் 2-ம் தேதி... சந்தை நிபுணர் களின் எதிர்பார்ப்பைவிட மிகச் சிறப்பான காலாண்டு முடிவை ஆப்பிள் நிறுவனம் அறிவித்ததைத் தொடர்ந்து, அந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு ஒரு ட்ரில்லியன் (ஒரு லட்சம் கோடி டாலர்) அமெரிக்க டாலர் என்கிற மிகப் பெரிய சாதனையைப் படைத்திருக்கிறது. இருபது ஆண்டு களுக்கு முன், ஏறக்குறைய திவாலாகிவிடும் என்கிற நிலையில் இருந்த ஆப்பிள் நிறுவனம், இன்றைக்கு இவ்வளவு பெரிய அளவை அடைந்திருப்பது ஆச்சர்யம்தானே!

பத்தாண்டுகளுக்குமுன்னரே அதாவது, 2007-ல் ‘பெட்ரோ சீனா’ என்கிற நிறுவனத்தின் சந்தை மதிப்பு ஒரு ட்ரில்லியன் டாலர் என்கிற மிகப் பெரிய அளவை எட்டி சாதனையைப் படைத்தாலும், அந்த உச்சநிலையை சில காலத்திற்கு மட்டுமே அந்த நிறுவனத்தால் தக்கவைத்துக் கொள்ள முடிந்தது. மேலும், இரும்புத்திரை நாடான சீனாவில் உள்ள ஒரு அரசு நிறுவனமான பெட்ரோ சீனா நிறுவனத்தின் சாதனையை, வெளிப்படைத்தன்மை மிக்க நாஸ்டாக்கில் பங்கு பரிவர்த்தனை நடைபெற்று வரும் ஆப்பிள் நிறுவன வெற்றியுடன் ஒருபோதும் ஒப்பிட முடியாது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்