கட்டட அனுமதிக்கான புதிய விதிமுறைகள்... சாதகமா, பாதகமா?

ட்டடங்கள் கட்டுவதற்கும், அதற்கான திட்ட அனுமதியைப் பெறுவதற்குமாக உருவாக்கப்பட்டுள்ள புதிய வரைவு விதிமுறைகளைப் பொதுமக்களின் கருத்துக் கேட்பிற்காக தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

மக்கள் தொகையும் நகரங்களும் பரந்துவிரிந்துகொண்டே போகிறது. இதனால் புதிதாக புதிதாக கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இயற்கைப் பேரீடர் நிகழ்வுகள் நடக்கும்போது விதிமுறைகளுக்கு உட்படாத கட்டடங்களால் பலவிதமான இன்னல்களுக்கு ஆளாக வேண்டியிருப்பதை இரண்டு ஆண்டுகளுக்குமுன் சென்னையில் பெருவெள்ளம் வந்தபோது நாம் நேரடியாக அனுபவித்தோம். எனவே, பெருகிவரும் கட்டடங்களை முறைப்படுத்துவது அரசாங்கத்திற்கு அவசியமான ஒன்றாகவும், சவால்  நிறைந்ததாகவும் இருக்கிறது. 

கட்டடங்களை முறைப்படுத்துவதற்கு முதன்முதலில் பஞ்சாயத்தின் வாயிலாக விதிமுறைகள் வகுக்கப்பட்டன. நகரங்கள் உருவானபின் மாநகராட்சி சார்பாக அதற்்கென புதிதாக விதிமுறைகள் கொண்டுவரப் பட்டன. பின்னர் நகரமும் மிகவும் பெரிதான சூழலில் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்துக்கென (சி.எம்.டி.ஏ.) பல விதிமுறைகள் வரையறுக்கப் பட்டன. அதுமட்டுமின்றி, பல்வேறு நகரங்களுக்கு அங்குள்ள சுற்றுச்சூழலைக் கருத்தில்கொண்டு தனித்தனிக் கட்டட விதிமுறைகள் உருவாக்கப்பட்டன.குறிப்பாக ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைவாசஸ்தலங்களுக்குத் தனித்துவமான விதிமுறைகள் உண்டு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick