சரியும் ரூபாய்... காரணங்கள்... தீர்வுகள்!

சுமதி மோகனப் பிரபு

ந்தியாவின் 72-வது சுதந்திர தினத்திற்கு முந்தைய நாளில் (ஆகஸ்ட் 14), டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவடைந்து 70 என்ற புதிய வீழ்ச்சி நிலையை அடைந்தது. துருக்கி நாடு சந்தித்து வரும் பொருளாதார நெருக்கடிதான் இந்த வரலாறு காணாத சரிவுக்கு உடனடிக் காரணம் என்று சந்தை நிபுணர்கள் கூறி வரும் நிலையில் ரூபாய் வீழ்ச்சிக்கான முக்கியக் காரணங்கள் பற்றி இங்கு விவாதிப்போம்.

ட்ரம்ப்பின் அதிரடியும் சீனாவின் பதில் தாக்குதலும்

ட்ரம்ப் அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற நாள் முதலாகவே உலக அரங்கில் அதிரடி அறிவிப்புக்களுக்குப் பஞ்சமில்லாமல் இருக்கிறது. குறிப்பாக, அமெரிக்காவின் இறக்குமதி அளவைக் குறைப்பதின் மூலம் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதையும் அதன் தொடர்ச்சியாக அமெரிக்கர்களுக்கான வேலை வாய்ப்புக்களை அதிகரிப்பதையுமே முக்கிய நோக்கமாக ட்ரம்ப் கொண்டிருக்கிறார்.

சீனா பொருளாதார ரீதியாக ஒரு வலுவான நாடாக இருப்பதினால், அமெரிக்காவின் பொருளாதார நிர்பந்தங்களைப் பெருமளவுக்கு தாக்குப்பிடிக்க முடிகிறது. ட்ரம்ப்பின் மிரட்டல்களுக்கு அடிபணியாதது மட்டுமல்லாமல் சீனா பதில் தாக்குதல் நடவடிக்கை களிலும் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக, தனது கரன்சியான யுவானை மதிப்பிழக்கச் செய்வதன் மூலம் ட்ரம்ப்பின் அதிகப்படியான இறக்குமதி வரி விதிப்பை மழுங்கச் செய்யும் நடவடிக்கைகளில் சீனா ஈடுபட்டு வருகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick