முதலாம் காலாண்டு... முக்கிய நிறுவனங்களின் முடிவுகள்! | Results of major companies in the first quarter - Nanayam Vikatan | நாணயம் விகடன்

முதலாம் காலாண்டு... முக்கிய நிறுவனங்களின் முடிவுகள்!

ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க்

முதல் காலாண்டில் ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க் நிகர இழப்பைச் சந்தித்துள்ளது. வராக் கடனுக்காக அதிக தொகையை ஒதுக்கியதுதான் இதற்குக் காரணம். கடந்த 2001-ம் ஆண்டுக்குப்பிறகு இப்போது இந்த வங்கி நிகர இழப்பைச் சந்தித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  ஜூன் காலாண்டில் இந்த வங்கி ரூ.119.55 கோடி நிகர இழப்பைச் சந்தித்துள்ளது. கடந்த ஆண்டில் இதே காலாண்டில் ரூ.2,049 கோடி நிகர லாபத்தைச் சந்தித்திருந்தது. இந்த வங்கியின் ஐ.சி.ஐ.சி.ஐ புரூடன்ஷியல் லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் பங்குகளை விற்றதன் மூலம் ரூ.1,110 கோடி வருமானம் பார்த்திருக்காவிட்டால் இந்த நிகர இழப்பு இன்னும் பெரிய அளவில் இருந்திருக்கும் என்று கூறப்படுகிறது. இந்தக் காலாண்டில் வட்டி வருமானம் ரூ.6,102 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டில் இதே காலாண்டில் இந்த நிகர வட்டி வருமானம் ரூ.5,590 கோடியாக இருந்தது குறிப்பிடத் தக்கது.

ஹெச்.சி.எல் டெக்னாலஜீஸ்

முதல் காலாண்டில் ஹெச்.சி.எல் டெக்னாலஜீஸின் நிகர லாபம் 9% அதிகரித்து ரூ.2,431 கோடியாக உள்ளது. வருவாய் 5.3% அதிகரித்து ரூ.13,878 கோடியாக உள்ளது. நடப்பு 2018-19-ம் நிதியாண்டில் இந்த நிறுவனத்தின் விற்பனையானது 9.5 - 11.5% வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வட்டி மற்றும் வரிக்கு முந்தைய வருவாயானது 5.7% உயர்ந்து ரூ.2,729 கோடியாக உள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick