திவால் சட்டம்... வாராக் கடன்களுக்கான முழுமையான தீர்வு சாத்தியமா? | Bankruptcy act: A complete solution to bad debts? - Nanayam Vikatan | நாணயம் விகடன்

திவால் சட்டம்... வாராக் கடன்களுக்கான முழுமையான தீர்வு சாத்தியமா?

சுமதி மோகனப் பிரபு

டந்த 2016-ம் ஆண்டு பெரும் ஆரவாரத்துடன் அறிமுகப்படுத்தப்பட்ட கடன் நொடிப்பு மற்றும் திவால் நடைமுறை சட்டம், இந்திய பொருளாதாரத்தின் ஆணிவேரையே அரித்துக் கொண்டிருக்கும் வாராக் கடன் பிரச்னைக்கு நல்ல தீர்வாக அமையும் என்று இந்திய ரிசர்வ் வங்கி முதற்கொண்டு சாமான்ய மக்கள் வரை பலரும் எதிர்பார்த்தனர்.

ஆனால், திவால் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதற்குப் பிந்தைய இரண்டு ஆண்டுகளில், வாராக் கடன் அதிகரித்துக்கொண்டே வருவது திவால் சட்டத்தின் செயல்பாடுகள் குறித்த கேள்வியை வலுவாக எழுப்பியுள்ளது. குறிப்பாக, 2017-18-ல் மட்டுமே சுமார் 2,30,000 கோடி ரூபாய் அளவுக்கு அதிகரித்துள்ள மொத்த வாராக் கடன் தொகை, மார்ச் 2018 இறுதியில் கிட்டத்தட்ட 10,30,000 கோடி ரூபாய் என இதுவரை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இது வங்கிகளின் மொத்தக் கடன் தொகையில் 11.20 சதவிகிதம் ஆகும். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick