மனை வாங்க... வங்கிக் கடன் வாங்கும் வழிகள்!

வீடு வாங்க வங்கிகள் மற்றும் வீட்டு வசதி நிதி நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு கடன்கள் வழங்குகின்றன. இதேபோன்று வீட்டுமனை வாங்குவதற்கும் வங்கிகள் மற்றும் வீட்டு வசதி நிறுவனங்கள் கடன் வழங்குகின்றன. வீட்டுக்கடன் வழங்கக் கடைப்பிடிக்கப்படும் விதிமுறைகளே மனை வாங்குவதற்கும் என்றாலும், சிலபல நிபந்தனைகளுடன் மனைக் கடன்கள் வழங்கப்படுகின்றன. வீட்டு மனை வாங்க வங்கியில் கடன்பெறுவது குறித்துக் கூடுதல் விவரங்களைத் தெரிந்துகொள்ள நிதித்துறை ஆலோசகர் சிவகுமாரிடம் கேட்டோம். “வீட்டு மனைகள் வாங்க என்று தனியாக வங்கிகள், வீட்டுவசதி நிதி நிறுவனங்கள் என்று எதுவும் இல்லை. வீட்டுமனை வாங்கி, அதில் கண்டிப்பாக ஓராண்டுக்குள் வீடு கட்ட வேண்டும் என்ற நிபந்தனையுடன்தான் கடன் அளிக்கப்படுகிறது. நாம் வாங்க உள்ள வீட்டு மனையை அடமானமாகக் கொண்டுதான் கடன் வழங்கப்படுகிறது. இந்தக் கடனை 24-36 மாதாந்திர தவணைகளில் திருப்பிச் செலுத்த வேண்டும். வீட்டு மனைக்கான வட்டி விகிதம் ஆண்டுக்கு 8-9 சதவிகிதமாக இருக்கிறது. இந்த வட்டி விகிதங்கள் மாறிக்கொண்டே இருக்கும். மேலும், வங்கிக்கு வங்கி மற்றும் கடன் விண்ணப்பிக்கும் நபர்களின் தகுதி வருமானம் தொழில் குறித்த நிபந்தனைகள் மாறுபட்டவையாக இருக்கின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்