5G - தயாராகும் டிஜிட்டல் இந்தியா!

1990-களில்தான் இந்தியாவில் முதன்முதலில் 2ஜி தொழில்நுட்பம் பயன்பாட்டிற்கு வந்தது; ஆனால், அந்தத் தொழில்நுட்பம் அதற்குப் பத்து ஆண்டுகளுக்கு முன்னரே பெரும்பாலான நாடுகளில் பயன்பாட்டிற்கு வந்துவிட்டது. இதேபோல 3ஜி தொழில்நுட்பமும், இந்தியாவுக்கு வர 15 ஆண்டுகள் ஆனது. ஆனால், 4ஜி இந்த விஷயத்தில் நம்மை ஏமாற்றவில்லை. உலகளவில் 2009-ம் ஆண்டு பயன்பாட்டுக்கு வந்த 4ஜி, அடுத்த ஐந்தே வருடங்களில் இந்தியாவில் அடியெடுத்து வைத்தது. அதற்கடுத்த இரண்டு வருடங்களில் தேசம் முழுக்கப் பயன்பாட்டிற்கு வந்துவிட்டது. தற்போது, 4ஜி வந்து இன்னும் இரண்டு ஆண்டுகள்கூட முடியவில்லை. ஆனால், அதற்குள்ளாகவே 5ஜி தொடர்பான ஆராய்ச்சிகள் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டன. அமெரிக்கா, சீனா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகள் 5ஜி-யை முதன்முதலில் பயன்பாட்டிற்குக் கொண்டுவருவதற்காகத் தீவிர முயற்சிகள் எடுத்துவருகின்றன. இதுநாள் வரைக்கும் மற்ற நாடுகளில் பயன்பாட்டிற்கு வந்து, அடுத்து சில ஆண்டுகள் ஆனபின்பே களத்தில் இறங்கும் இந்தியா, இந்த முறை 5ஜி விஷயத்தில் உலகநாடுகளுக்கு இணையாகத் தீவிரம் காட்டி வருகிறது. இன்னும் இரண்டு வருடங்களுக்குள் இந்தியாவில் 5ஜி-யைக் கொண்டுவந்துவிட வேண்டும் என்ற முனைப்போடு இருக்கிறது இந்தியா. நிஜத்தில் இது சாத்தியம்தானா?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்