ஷேர்லக்: வேகம் எடுக்கும் மிட்கேப் பங்குகள்!

ஓவியம்: அரஸ்

“நீங்கள் கோவை கான்க்ளேவ் பரபரப்பில் இருப்பீர்கள். எனக்கும் முக்கியமான வேலை இருக்கிறது. எனவே, கேள்விகளை அனுப்புங்கள்” என வாட்ஸ்அப்பில் தகவல் அனுப்பினார் ஷேர்லக். நாம் கேள்விகளை அனுப்ப, அடுத்த ஒரு மணி நேரத்தில் நம் மெயிலுக்கு பதில்களை அனுப்பிவைத்தார். 

வாராக் கடன் கணக்குகள் குறித்து ரிசர்வ் வங்கி தீவிரமாக ஆய்வு செய்து வருகிறதாமே?

“வங்கிகளிடம் கடன் வாங்கியுள்ள நிறுவனங்கள் திடீரென மஞ்சள் நோட்டீஸை கொடுத்துவிட்டு திவால் என அறிவித்து அதிர்ச்சியளிப்பதைத் தடுக்கும் நோக்கில்  பெரிய நிறுவனங்களின் சுமார் 200 வாராக் கடன்களின் கணக்குகள் குறித்து ரிசர்வ் வங்கி தீவிரமாக ஆய்வு செய்துவருகிறது.

இந்தப் பட்டியலில் வீடியோகான், எஸ்ஸார் ஸ்டீல், ஏபிஜி ஷிப்யார்டு, பூஷன் ஸ்டீல் மற்றும் மொன்னெட் இஸ்பட் உள்ளிட்ட  முக்கிய நிறுவனங்களும் இடம் பெற்றுள்ளன. இந்த நிறுவனங்கள் கடந்த காலத்தில் கடன்களைத் திருப்பிச் செலுத்திய வரலாறு உள்ளிட்ட பல்வேறு விவரங்களை அளிக்குமாறு, சம்பந்தப்பட்ட வங்கிகளிடம் ரிசர்வ் வங்கி கேட்டுள்ளது.

 நடப்பு நிதியாண்டில் ஜூன் மாதத்துடன் முடிவடைந்த முதலாவது காலாண்டில் வங்கிகளின் மொத்த வாராக்கடன் ரூ. 8.71 லட்சம் கோடியாக உள்ளது. இதில் ரூ.1.29 லட்சம் கோடி தனியார் வங்கிகளைச் சேர்ந்ததாகவும், ரூ.7.42 லட்சம் கோடி பொதுத்துறை வங்கிகளைச் சேர்ந்ததாகவும் உள்ளது.”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்